இருண்ட கோபுரம் படு துகளாகிட ஒளியாகி
இசைந்த இன்பமும் துன்பமும் ஒன்றெனும் அறிவாகி
மருண்ட நெஞ்சினில் வலி கெட மாமயில் வருவோனே
மலை வலஞ்செயு மாநகர் சிட்னியில் உறைவோனே
இருந்து சிட்னியில் கலை தொழில் பண மிக உயர்வாகி
இலங்குவோர் பலர் தமிழர்கள்; அவரொடு சமமாக
வெருண்டு குடிவரும் அகதிகள் வாழவும் அருள்வாயே
விலங்கு வேடர்கள் மடந்தை தோள் விழை பெருமாளே