ஓய்வு நிலைப் பயணி

சாளரத் தருகே இருந்து நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்து வந்த பாதைகள் பற்றி
பாதையில் போன மனிதர்கள் பற்றி
பள்ளங்கள் மேடுகள் குழிகளைப் பற்றி
பயந்ததும் விழுந்ததும் எழுந்ததும் பற்றி…

புல்வெளிச் சிரித்த பூக்கள் பற்றி
பூக்கள் அலைத்த காற்றைப் பற்றி
இளங் காலைப் பனி மூட்டத்தின் நடுவே
எழுந்து வந்த சூரியன் பற்றி

வடமேல் திசை, ஒரு சிற்றூர் கரையில்
மூங்கில் மரத்துப் பாலத்தின் கீழ்
கடப்பம் பூக்களை அள்ளிச் சென்ற
பெயர் தெரியாத நதியைப் பற்றி…

எப்படி உலகம் இருக்கும் என்றும்
எண்ணிப் பார்க்கிறேன்….
மாரி காலம் வருகின்ற போது…
அந்த மாரியைத் தொடர்ந்து நான் பார்க்கும் படியாய்
வசந்தம் ஒன்று பின்னே வராத
மாரி ஒன்று வருகின்ற போது,
எப்படி உலகம் இருக்கும் என்றும்
எண்ணிப் பார்க்கிறேன்….

எவ்வளவோ நான் பார்க்காத விடயங்கள்
இவ்வுலகில் இன்னும் இருக்கிறது
ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு ருதுவிலும்
ஒரு புதுப் பசுமை தளிர்க்கிறது

தவழும் நதியில் செல்லும் தண்ணீர்
தனியே திரும்பி வருவதில்லை
நதியில் நிலவு பொழியும் ஆனால்
நாளை அதேபோல் பொழிவதில்லை

இதுபோல், சரியாய் இதுபோல் ஓர்கணம்
இனிமேல் வாழ்வில் வருவதில்லை
இதிலே கலந்த மகிழ்வும் துயரும்
இனிமேல் நெஞ்சம் அடைவதில்லை

கடந்து வந்த பாதைகள் பற்றியும்,
சந்தித்து வந்த மனிதர்கள் பற்றியும்
சிந்தனை நடந்து கொண்டு இருக்கும் போது
என் செவிகள் விழித்தே இருக்கின்றன

கதவடியில் கேட்கும் கால் அடிகளுக்ககவும்
திரும்பி வருபவர்களின் பேச்சுக் குரல்களுக்காகவும்
என் வயோதிபச் செவிகள்
விழித்தே இருக்கின்றன.

Original

I sit beside the fire and think
of all that I have seen
of meadow-flowers and butterflies
in summers that have been;

Of yellow leaves and gossamer
in autumns that there were,
with morning mist and silver sun
and wind upon my hair.

I sit beside the fire and think
of how the world will be
when winter comes without a spring
that I shall ever see.

For still there are so many things
that I have never seen:
in every wood in every spring
there is a different green.

I sit beside the fire and think
of people long ago
and people who will see a world
that I shall never know.

But all the while I sit and think
of times there were before,
I listen for returning feet
and voices at the door.

(In ‘Lord of The Rings’: J.R.R.Tolkien)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *